மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் பாராட்டு விழா

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் நாளைய சாதனை மாணவிகளுக்கான ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை ஊராட்சிகளில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் கட்ட காரணமாக இருந்த செல்விக்கு மத்திய அரசு ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கியது.இவரைப் பாராட்டும் வகையிலும் நாளைய சாதனையாளர்களாக மாணவிகளை உருவாக்கும் வகையிலும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவிகளை நாளைய சாதனையாளர்களாக வரவேண்டும் என்று ஊக்கப்படுத்தி பேசினார்.மாநகராட்சி கல்வி அதிகாரி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வியை வாழ்த்திப் பேசினார்.செல்வி தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் மாணவிகளுக்கான சுகாதாரம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியை மகேஸ்வரி வரவேற்றார். மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், கண்ணன், மக்கள் தொண்டன் அசோக்குமார், துறை விஜய பாண்டியன், கோபிநாத், ராஜேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image