கனரா வங்கியின் 114 வது தின விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்காக மாபெரும் பொது அறிவு விநாடி வினா போட்டி

கனரா வங்கியின் 114 வது தின விழாவை முன்னிட்டு மதுரை வட்ட கனரா வங்கியின் சார்பாக 8 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 16 தென் தமிழக மாவட்ட பள்ளி குழந்தைகளுக்காக மாபெரும் பொது அறிவு விநாடி வினா போட்டி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் 450 பள்ளிகளை சேர்ந்த 1640 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு 50.000 ரூபாயை, திருச்சி மவுண்ட் விட்ரோ பள்ளியை சேர்ந்த மாணவர் முகமது அஸ்லாம், ரகுமான் மற்றும், இரண்டாவது பரிசு 30,000 ரூபாயை மதுரை மகாத்மா குளோபல் பள்ளி மாணவர்கள் விகாஸ், கண்ணன் மூன்றாவது பரிசான 20.000 ரூபாயை திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அமோகா, சபரீஷ் ஆகியோர் தட்டிச் சென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கனரா வங்கி மதுரை வட்ட பொது மேலாளர் பரமசிவம் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர்கள் கலைச்செல்வன்,மகேந்திரன், மாதவராஜ், சினேகலதா, ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image