உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் சௌந்தர்யா தலைமையில் நடைபெற்றது.தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் தங்களது வீட்டின் சுற்றுபுற பகுதிகளில் மழைநீர் தேங்கவிடாமல் பாதுகாப்பது, பழைய டயர், தேங்காய்கூடுகள் போன்றவைகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துகொள்வது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி கோhட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டாட்சியர்கள் செந்தாமரை, சிவராமன், மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..