மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக வீர வணக்கம் மற்றும் மாபெரும் நினைவேந்தல் கூட்டம்.

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற மண்ணுரிமை போராளிகளான, சான் தாமசு_ஏழுமலையின் 25 வது ஆண்டு வீர வணக்கம் மற்றும் மாபெரும் நினைவேந்தல் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்தக் கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள ஜான்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நில உரிமை மீட்பு இயக்கம் மாநில செயலாளர் ந.வ.சசி தலைமை தாங்கினார்.முருகன்,தலக்காவூர் ஆறுமுகம்,துரை ராசு, சர்வேயர் ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெ.ச.உலகநம்பி, நில உரிமை மீட்பு இயக்கம் மாநில துணைச் செயலாளர், வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து பஞ்சமிநில வரலாறு எனும் தலைப்பில், முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்.சிறப்பாக உரையாற்றினார்.இந்நிகழ்சியில் வழக்கறிஞர் க.பிரபு ராஜதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர்ஏ.சி.பாவரசு,மற்றும்பெ.ஆற்றலரசு,அ.செல்லப்பாண்டியன், அ.போஸ்,க.கலைவாணன், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான, நில உரிமை மீட்பு இயக்கம் சார்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கான பஞ்சமி நிலங்களை மீட்டுடெக்க வேண்டும் என்பது முக்கிய அம்சமாக பேசப்பட்டது.இறுதியாக முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..