Home செய்திகள் இராமநாதபுரத்தில் அரசு கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி

இந்திய அரசு ஜவுளி துறை அமைச்சகம், தமிழக அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நேரடி சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி தொடக்க விழா ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.பரமக்குடி கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் சு.ராகவன் வரவேற்றார். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் வி.ஜி.அய்யான், கே.கே.சங்கீதா, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தலைவர் ஜி.ஜி.காசி விஸ்வநாதன் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் கே.கே.ரவீந்திரன், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி குழும நிர்வாக உறுப்பினர் டி.கே.ராமநாதன் ஆகியோர் பேசினர்.

பரமக்குடி கைத்தறி அலுவலர் இரா.மோகன் நன்றி கூறினார்.கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ராகவன் கூறியதாவது:ராமநாதபுரம் நகரில் கைத்தறி கண்காட்சி விற்பனை ஆறாவது முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம், மதுரை, திண்டுக்கல், கோவை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அரங்குகள் அமைத்து ஜவுளி ரகங்களை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக கைத்தறி நெசவாளர்களின் தயாரிப்புகளான படுக்கை விரிப்புடகள், பட்டு சேலைகள், பட்டு வேஷ்டி, கோரா சேலைகள், பருத்தி சேலைகள் துண்டுகள், சின்னாளபட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல் பட்டு, காட்டன் சேலைகள், கைலிகள் அனைத்தும் வாடிக்கையாளர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்காக ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இக்கண்காட்சியில் விற்பனையாகும் ஜவுளிகளுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு நடந்த தண்காட்சியில் 22 ரூ.71.45 லட்சம் ஜவுளி ரகங்கள் விற்பனையானது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் ரூ. 73 லட்சம் ஜவுளிகள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!