சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் எந்த குப்பைகளை சுத்தம் செய்தார் மோடி! – கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன். வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அப்போது, கடற்கரையில் குப்பைகளை மோடி சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள மோடி, மாமல்லபுரத்தில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டேன். இது 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, கடற்கரையில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாகவும் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்வோம். நாம் ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதி செய்வோம் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை ஒட்டி கடந்த ஒரு வாரமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இரு தலைவர்கள் வருகையை ஒட்டி கடற்கரையை சுத்தமாகவே வைத்திருந்தனர். அப்படி இருக்க எந்த குப்பையை பிரதமர் சுத்தம் செய்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply