கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதார வீழ்ச்சி நிலை மற்றும் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்; 10.10.2019 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி நிலை மற்றும் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ். ளு.ஆ.முகம்மது யூசப் செயலர் S.M.H ஷர்மிளா மற்றும் இயக்குநரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் Dr.E.ரஜபுதீன்  தலைமை தாங்கினார். தொழில் நிர்வாகவியல் துறைத்தலைவி Dr.S. விமலி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆப்பிரிக்கா (நைஜிரியா) பல்கலை கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் Dr.D. ராஜன் பெங்களுரு கிரிஷ்ட் பல்கலை கழகத்தின் இணைப் பேராசிரியர் Dr.Tரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஒடுங்கிய பொருளாதாரத்தை மேலோங்கி கொண்டு வருவதற்கான சிறப்பான பல வழிமுறைகள் மற்றும் பொருளாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறைத் தலைவர் Dr.M அப்பாஸ் மாலிக் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் வணிகவியல் துறைப் பேராசிரியர் Dr.S. நாசர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மதுரை அமெரிக்கன் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் S. முகம்மது உசேன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.

மேலைம் இக்கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் Dr. P. பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயனடைந்தார்கள். இறுதியாக தொழில் நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் I ரியாஸ்தீன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழில் நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் K.அஜ்மல்கான், திருமதி. Vஜனனி மற்றும் S:சதாம் உசேன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..