மண்டபம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் மண்டபம் கல்வி மாவட்ட அளவிலான 47வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி விழா நடந்தது. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் தண்டபாணி தலைமை வகித்தார். முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். இருமேனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் சார்லஸ் வரவேற்றார்.மாணவர்களின் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் இடம் பெற்ற கண்காட்சியைராமநாதபுரம் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தங்கவேல், தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் 110 அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக்., பள்ளிகளைச் சேர்ந்த 560 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அறிவியல் ஆசிரியர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கணிதம், அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் விளக்க உரை ஆற்றினர். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார். மாணவர், ஆசிரியர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள், கணித கருத்தரங்கில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்ற மாணாக்கருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சித்த வைத்திய பிரிவு சார்பில் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் முத்துச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மண்டபம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image