இராமநாதபுரத்தில் 14 பேருக்கு அரசு பணி நியமன ஆணை: மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினாா்

தமிழக அரசு துறைகளில் பணியாற்றிய காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் 12 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர், தலா ஒருவருக்கு கிராம உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என 14 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார். நியமன ஆணை வழங்கிய ஆட்சியர், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இவர்களுக்கு ஒரு வார புத்தாக்க பயிற்சி அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலர் (பொது) சுகுமாறன் உடனிருந்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply