Home செய்திகள் திருவாடானையில் கேபிள் டிவி இணைப்புகளுக்கு அரசின் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் , தமிழகம் முழுவதும் கேபிள் டிவி இணைப்பு வீடுகளுக்கு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கி, குறைந்த கட்டணத்தில் சினிமா, செய்தி மற்றும் கேளிக்கை சானல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. கட்டண குறைப்பு, இலவச செட் டாப் பாக்ஸ் பற்றிய தகவல் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த பொது மக்கள் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை தொடர்பு கொண்டு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். திருவாடானை வட்டத்தில் உள்ள வீடுகளில், தனியார் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்,5 ஆயிரம் இணைப்பு களுக்கு அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் தேவைப்படுகிறது. அரசு செட் டாப் பாக்ஸ் துரிதமாக வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ராமநாதபுரம் தனி தாசில்தாரிடம், திருவாடானை வட்ட அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் அசோசியேஷன் நிர்வாகிகள் கே.கே.ராமலிங்கம், எஸ்.மோகன் தாஸ், எம்.மணிமாறன்,ராமலிங்கம், டி.மோகன், வி.ஞானசேகன், வி.மனோகரன், சிவபூர்ண துரை, சிவராமகிருஷ்ணன், ரோஜா முருகேசன்,உள்ளிட்டோர் இன்று (10/10/2019) மனு அளித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!