மண்டபத்தில் கண் பார்வை விழிப்புணர்வு கருத்தரங்கு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2வது வியாழக்கிழமை சர்வதேச கண் பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பார்வை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மருத்துவ அலுவலர் டாக்டர் பாக்யநாதன் தலைமை வகித்தார். பார்வை இழப்பை தடுக்க உரிய கால அறுவை சிகிச்சை, கண் அழுத்த நோய்க்கு பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு பார்வை கோளாறுகளை தடுக்க உரிய காலத்தில் கண்ணாடி அணிய வேண்டும், கருவிழி பாதிப்பால் பார்வை இழந்தோர் மீண்டும் பார்வை பெற இறப்பிற்கு பிறகு கண் தானம் செய்ய வேண்டும், கண்களில் ஏற்படும் காயங்களுக்கு சுய சிகிச்சை செய்யக்கூடாது, கண்ணுக்கு தேவையான புரதச்சத்து ஏ அதிகமுள்ள பச்சை காய்கறிகள், கீரைகள், காரட், மீன், முட்டை, பால் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும், குறைந்த அல்லது எதிர் வெளிச்சத்தில் படிப்பதையும், கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பதையும், மிக அருகில் அமர்ந்து டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை விரிவான கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கண் மருத்துவ உதவியாளர் எஸ். டேனியல் ஜோசப் எடுத்துரைத்தார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..