இராமநாதபுரத்தில் நாளை (11/10/19) தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்.

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலை நாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடும் இளைஞர்களின் கல்வித்தகுதிகேற்ப ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவேலை நாடுநர், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்பஅடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை(11.10.19) காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறை படிபரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image