சிவஞானபுரம் கூட்டுறவு சங்க மறுத்தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் பதவி ஏற்பு 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.         அப்போது சிவஞான புரத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாலசுப்பிரமணி  37..  கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.இருப்பினும் இறுதி பட்டியலில் பாலசுப்பிரமணியன் பெயர் வெளியிடப்படவில்லை. இதனால் இது சம்பந்தமாக தெற்கு மண்டல கூட்டுறவு கடன் சங்க தேர்தல் பிரிவில் (கோயம்புத்தூர் மண்டலத்திற்கு உட்பட்டு வருவதால்) கோயம்புத்தூர்  நீதிமன்றத்தில் இதுகுறித்து தேர்தல் விதிகளை மீறி தேர்தல் நடந்ததாக கூறி எதிர்ப்பு மனு தாக்கல் செய்தார்.

   இது குறித்து நீதிமன்ற நீதிபதி முறையாக விசாரித்து தேர்தல் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பொது இடத்திற்கு தேவையான தேர்தல் நடத்த தமிழக அரசின் கூட்டுறவு சங்க தேர்தல் தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 3 .10.2019. தேதி சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டிடத்தில் தேர்தல் அதிகாரி அந்தோணிராஜ் தலைமையில் தேர்தல் நடைபெற்றது,.
நடந்த தேர்தலில் முறையாக இயக்குனருக்கான தேர்தல் நடத்தப்பட்டு முறையாக இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர் அதனைத்தொடர்ந்து. நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.   இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சீனியா பிள்ளையும், துணைத் தலைவருக்கு போட்டியிட்ட ஆறுமுகம் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் வேளாண்மை தொடக்க கூட்டுறவு கடன் சங்க  தலைவராக சீனியா பிள்ளை தலைவர் பதவி ஏற்றுக் கொண்டார். துணைத்தலைவராக ஆறுமுகம் பதவியேற்றுக்கொண்டார்.    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு கள அலுவலர் ரவிக்குமார், கடன் சங்க செயலாளர் ராஜமாணிக்கம்,அதிமுக பிரமுகர் பொன்னுத்துரை, அதிமுக கிளை நிர்வாகி அழகுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply