மரணத்தை விளைவிக்கக்கூடிய மூன்று வாள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

தெப்பக்குளம்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் சீனிவாசன் காவலர்.அன்பு ஆகியோர்கள் மதுரை காமராஜர் சாலை, முன்பு வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்ததில் மதுரை பழைய குயவர் பாளையம், ஜானகி மாதவ அய்யர் தெருவைச் சேர்ந்த கத்தி ஆனந்த் என்ற ஆனந்தகுமார் 25 மற்றும் இசக்கி முத்து 23 என்பது தெரியவந்தது. மேற்படி ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் அபாயகரமான மூன்று வாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் கணேசன்  இருவரிடமும் விசாரணை செய்தபோது முன் விரோதம் காரணமாகவும் பழிக்குப்பழிவாங்கும் எண்ணத்தில் ஏழு நபர்களை கொலை செய்வதற்காக வாளுடன் வந்ததாகவும் தெரிவித்தனர். எனவே அவர்கள் இருவரையும் காவல் ஆய்வாளர் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று வாள்கள் மற்றும் ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். மேலும் ஏழு உயிர்களை கொலை செய்வதற்கு முன்பே அவற்றை தடுத்து கொலைக்குற்றம் நடைபெறாமல் தடுத்து திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், பாராட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..