கீழக்கரையில் சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவு நீர்… நித்திரையில் நகராட்சி நிர்வாகம்..

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில  கழிவு நீர் வழிந்தோடி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

தினம் தினம் பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுமக்களும் நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.  ஆனால் இங்க அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை.

கீழே காண்பது வடக்குத் தெரு 19,20 வார்டு பகுதியின் பிரதான சாலையாகும்.  இப்பகுதியல் பகுதியில் கழிவு நீர் குழாய் உடைந்து ரோடுகள் முழுவதும் கழிவு நீரால் நிறைந்து காணப்படுகிறது.  இப்பகுதியில் பல் பொருள் அங்காடி மற்றும் தொழுகைக்காக முகத்தை சுழித்த வண்ணம் செல்கின்றனர்.  ஆனால் அரசு அதிகாரிகளுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.

கீழக்கரை சாக்கடை பிரச்சினைக்கு என்று விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..