உசிலம்பட்டி அருகே சந்தைபட்டியில் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயிலில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சந்தைபட்டியில் வருடம் வருடங்களாக புரட்டாசி மாதத்தில் அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடமும் கோயில் திருவிழா இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் முத்தாலம்மனுக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூசாரி சாமி அருளுடன் கரகத்தை தலையில் சுமந்தபடியே முக்கிய தெருக்களின் வழியாக கோயிலுக்கு சென்றடைவர்.அதனை தொடந்து பெண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு, அக்கினிசட்டி எடுத்தல், மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற சேத்தாண்டி வேடம் போன்ற நிகழ்சிகள் நடைபெற்றது. மேலும் திருவிழாவிற்காக தெருக்கள் மற்றும் கோயில்களில் அலங்கார மின் விளக்குகளால் ஜொலித்து காணப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..