துர்நாற்றம் வீசும் சமுத்திரம் காலனி. தொற்றுநோய் பயத்தில் திருவண்ணாமலை மக்கள்..

திருவண்ணாமலை கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள சமுத்திரம் காலனி பகுதியில், கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்படாததால், தெருக்கள் அனைத்திலும் கழிவு நீர் வழிந்தோடி தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையிலும், சமுத்திரம் காலனி பகுதியில் மட்டும் கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. மிக மோசமான துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது. மேலும் இப்பகுதியில் போதுமான பொதுக்கழிவறைகள் இல்லாத்தால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

கல்நகர் மற்றும் கல்குதிரை தக்கா தெரு பகுதியில் சாதாரண ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை நகருக்கு மாதந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். திருவண்ணாமலை நகரில் பொது சுகாதாரத்தை காக்க வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால், டெங்கு, உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது, மக்கள் நல திட்ட பணிகளுக்கு டென்டர் விடுவதில் கமிஷன் எடுப்பதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம், இந்த மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் சுகாதரத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் கூட, இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சமுத்திரம் காலனி பகுதியில், சுகாதாரத்தை காப்பாற்ற கநராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..