தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் நவாஸ் கனி எம்பி.. மனு

தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி , ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இடம் மனு அளித்தார்.இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி , ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவையில் இருந்து இராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக இராமேஸ்வரம் வரைச் செல்லும் விரைவு வண்டி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மங்களூர் செல்லும் வாரம் இரு முறை விரைவு வண்டி, ராமேஸ்வரத்தில் இருந்து கோவை தினசரி விரைவு ரயில்களை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இயக்க வலியுறுத்தினார்.ராமேஸ்வரம் – சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில்களை உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு வழிவகுக்குமாறு கேட்டுக்கொண்டார். மதுரை – பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 49 ல் உள்ள கமுதக்குடி மூடப்பட்டுள்ள LC NO. 468 லெவல் கிராசிங் – ஐ மக்கள் வசதிக்காக மீண்டும் திறப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி நவாஸ்கனி எம்பி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..