நாங்குநேரி, விக்ரவாண்டி தொரு தி இடைத்தேர்தலை புறக்கணிக்க தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

இமானுவேல் சேகரன 95வது பிறந்த நாளையொட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமை தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி பாண்டியன் தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், தேவேந்திர குல ஏழு உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதியாக முன்னிலைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் போகிறது. இதனால் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனிவரும் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கிறோம்.. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்னிவயல், கூரியூர், புத்தேந்தல், காரேந்தல், பாப்பா குடி, காவனூர், பெரியார் நகர், தேவேந்திரர் நகர் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்பு கொடி கட்டி இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிடில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களை புறக்கணிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார். இம்முகாமில் 25க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, மயில்சாமி, படையப்பா, ஐயாச்சாமி, ராமகிருஷ்ணன், செல்வக்குமார், விக்கி, சசிகுமார், சுர்ஜித், பரமேஸ்வரன், விக்னேஸ்வரன், வீரஜோதி, சத்யராஜ், ஜெயராமன், கார்த்திக் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image