முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி இன்று 09/10/2019 காலை 10.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை அரபித்துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் அன்வர் ரொ சாகின் அவர்கள் வரவேற்புரை ஆற்றினர். கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் கூட்டு முயற்சியை பாராட்டினார் ஆனால் ஆங்கில தொடர்பு போதிய முயற்சி இல்லை என்றும், வெற்றி பெற்றவர் திறமையாக யோசிப்பார்கள் ஆகவே நீங்களும் திறம்பட யோசிக்கனும் என்று கூறி தலைமை உரையாற்றினார். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் S.நந்தகோபால், இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் பள்ளி முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் முழுமையான வளர்ச்சி பெற்ற நிறுவனம் முகம்மது சதக் என்றும் போட்டிகள் நிறைந்த உலகத்தை தைரியமாக எதிர்க் கொள்ள தயாராகுங்கள் என்று சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் பல பள்ளிகள் கலந்துக் கொண்டன. அவை
முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தீனியா மெட்ரிக்குலேசன் பள்ளி, ஆல்வீன் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஸ்ரீ சரஸ்வதி வித்யலாயா மெட்ரிக்குலேசன் பள்ளி, நேஷனல் அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளி, ஷிபான் நூர்குலோபல் அகடாமி பள்ளி ஆகியவை கலந்துக் கொண்டன.

மொத்தம் 400 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 36 மாணவர்கள் அறிவியல் சார்ந்த சுய திட்டத்தை (project)விளக்கி கூறும் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ஷிபான் நூர்குலோபல் அகடாமி பள்ளி, இரண்டாம் பரிசு ஷிபான் நூர்குலோபல் அகடாமி பள்ளி மற்றும் நேஷனல் அகடாமி பள்ளி, மூன்றாம் பரிசு தீனியா மெட்ரிக்குலேசன் பள்ளி, மற்றும் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பரிசுகள் பெற்றன.

இந்நிகழ்வை கணினிப் பயன்பாட்டியல், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணிதவியல் ஆகிய அறிவியல் துறைகள் சேர்ந்து ஒருங்கிணைத்தனர். இறுதியாக கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் S.ரீனா பர்வீன் நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image