பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலகத்துக்கு களப்பயணம்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.அப்போது அஞ்சல்துறையின் காரைக்குடி கோட்ட கண்கணிப்பாளர் சுவாமிநாதன் மாணவர்களை வரவேற்றார். பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து பாஸ்போர்ட் அலுவலர் மணிவேலும் ,அஞ்சலக துறையின் செயல்பாடுகள் ,பயன்கள் குறித்து கோட்ட கண்கணிப்பாளர் சுவாமிநாதன் , அஞ்சலக தலைமை அதிகாரி செந்தில்குமார் ஆகியோரும் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர். ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.மாணவர்கள் கோட்டையன் ,சிரேகா,அய்யப்பன் ,அஜய்பிரகாஷ்,ஜனஸ்ரீ உட்பட பலர் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..