வேடசந்தூர் அருகே கூலி தொழிலாளி ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் பாடுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது சிக்ராம்பட்டி கிராமம். இங்கு சின்னச்சாமி என்ற கூலி தொழிலாளி ஒருவரை  மர்ம நபர்கள் வீடு தேடி வந்து கத்தியால் மூன்று இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதை அறிந்த சின்னச்சாமியின் சகோதரி ராணியம்மாள்  கூச்சலிட அவரை தாக்க மர்மநபர்கள் முயன்றுள்ளனர். பின்பு  மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.சம்பவம் நடைபெற்ற இடம் கிராமம் என்பதால் சின்னச்சாமியை கத்தியால் குத்திய நபகள் யார் என தெரியாமல் கிராம மக்கள் சின்னாச்சாமியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நள்ளிரவில் கிராம பகுதியில் ஒரு கூலி தொழிலாளியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..