Home செய்திகள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி

by mohan

இராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் சாலை ஒரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவு ராவ் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்ததாவது:தமிழக அரசு சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தி பசுமையான சூழ்நிலையை உருவாக்கிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில்,நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை ஓரங்களில் நிழல் தரும் வேம்பு, புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டம் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி,முதுகுளத்தூர், சாயல்குடி, திருவாடனை நெடுஞ்சாலைத்துறை பிரிவுகளுக்குட்பட்ட  சாலைகளில் இவ்வாண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மரக்கன்றுகள் நடுவதற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை ஒவ்வொரு பிரிவுக்குட்பட்ட சாலைகளில் 500 மரக்கன்றுகள் வீதம் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் பிரிவிற்குட்பட்ட இராமநாதபுரம்- நயினார்கோவில் சாலை மார்க்கத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதற்கு 22 அளவில் ஆழமாக குழி தோண்டப்பட்டு குழியின் இரண்டு முனைகளில் பிவிசி பைப் மூலம் துளையிடும் வகையில் நிருவப்பட்டு அதில் உரம் கலந்த மணல் நிரப்பப்பட்டு செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இத்தகைய நடவு முறையானது வறட்சி காலங்களில் மரக்கன்றுகள் ஈரப்பதமாக இருப்பதற்கு வழிவகை செய்யும் என்றார். சாலைகளில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் திருப்புல்லாணி,சேதுக்கரை, மார்க்க சாலையில் ரூ.7.35 லட்சம், திருப்புல்லாணி-உத்தரகோசமங்கை மார்க்க சாலையில் ரூ. 9.90 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலை துறை மூலம் அமைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜி.முருகன், உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் முருகானந்தம், வட்டாட்சியர் கி.தமிழ்ச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணகிரி, விஜயகுமார் வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், உட்பட அரசு அலுவலர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!