Home செய்திகள் தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு

தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு

by mohan

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின நிகழ்வையொட்டி, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ராமேஸ்வரம் ஜெ.ஜெ. நகர் பகுதிகளில் நடைபெறுகிறது. இம்முகாமில் குளங்கள் சீரமைப்பு, மரக்கன்று நட்டு பராமரித்தல், தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு மற்றும் பருவ கால நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

இதன் ஒருபகுதியாக ராமேஸ்வரம் நகர் பேருந்து வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் சந்தானவேலு, மண்டபம் முகாம் மத்திய கடல் மற்றும் மீன்வள ஆராய்ச்சி நிலைய மேலாண் உறுப்பினர் கே.முரளிதரன், முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார், நுகர்வோர் இயக்க துணைதலைவர் தில்லை பாக்கியம், பொறியாளர் முருகன், ஆசிரியர்கள் பழனிச்சாமி, தினகரன், பசுமை திட்ட ராமேஸ்வரம் ஒருங்கிணப்பாளர் சரஸ்வதி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயகாந்தன் வரவேற்றார். பேருந்து நிலையம் அருகே என்எஸ்எஸ்., மாணவர்கள்தூய்மை பாரத விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

வன உயிரின வார விழாவையொட்டி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் சீருடை அணிந்த மாணவர்கள், மண்டபம் முகாம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கூட மண்டல மையத்தில் உள்ள உயிர் மீன் காட்சியகத்தில் மீன்கள் வளர்ப்பு முறையை பார்வையிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!