Home செய்திகள் திருவண்ணாமலை – சமுதாய வளைகாப்பு விழா

திருவண்ணாமலை – சமுதாய வளைகாப்பு விழா

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில்  சமுகநலம் மற்றும் சத்துத்துணவுத் திட்டத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டாரங்களை சார்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கே .எஸ்  கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை துவக்கி வைத்தார்.மேலும் இவ்விழாவில் கர்ப்பிணிகளுக்கு புடவை, மாலை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கள பொருட்களுடன்,இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் சீர்வரிசை ஆகியவைகளுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது

விழாவிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மேற் பார்வையாளர், அங்கவாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர் .தமிழக இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் விழாவில் பேசியதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2011 முதல் தற்பொழுது வரையில் 13.600 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 34 இலட்சம் செலவிலும், நடப்பாண்டில் 2720 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6.80 இலட்சம் செலவில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பேசினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!