உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற வீணை வாசித்தல், பரத நாட்டிய நிகழ்ச்சி..

உசிலம்பட்டியில் சங்கீத வித்யாலயாவின் 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் பங்கேற்ற வீணை வாசித்தல், பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்து வரும் இந்தியக்கலைகளான பரதநாட்டியம் வீணை வாசித்தல் பாட்டுபடித்தல் போன்றவற்றை காப்பாற்றும் நோக்கோடு சங்கீத வித்யாலயா என்ற தனியார் அமைப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு இவற்றை கற்றுத்தருகிறது.ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் இதன் அரங்கேற்றம் நடைபெறுகிறது..

இந்த வருடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முத்துச்சாமி சீனியம்மாள் திருமண மண்டபத்தில் உசிலம்பட்டி சங்கர் சங்கீத வித்யாலயாவின் 3ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கான பரத நாட்டியம், வீணை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஏராளாமான குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறமைகளை வெளிபடுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் சங்கர் சங்கீத வித்யாலயா நிறுவனர் ராஜேஸ்வரி சங்கர், மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image