திருவண்ணாமலை- மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் கோரிக்கைகளை மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். . மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்க கேட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பல முறை மனு கொடுத்தும் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாறாக அந்த கொடுக்கப்பட்ட மனுக்களும் அரசு கோப்புகளில் காணப்படவில்லை. எனவே ஏற்கனவே அளித்த மனுவை கண்டுபிடித்து உதவித்தொகை உத்தரவு வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ்பாபு செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் மூர்த்தி

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..