மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் மறைந்தார்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தலைவர் (சேர்மன்) பதவிக்கான முதல் தேர்தல் 1986 ஆம் ஆண்டு நடந்தது. அதிமுக., சார்பில் போட்டியிட்ட தங்க மரைக்காயர் (எ) ஷேக் அப்துல் காதர், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று 03.3.1986ல் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதனை 1996, 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக 4 தேர்தல்களிலும் தங்கமரைக்காயரே வென்று சாதனை படைத்தார். பேரூராட்சி தலைவர் பதவியை தொடர்ச்சியாக 5 முறை அலங்கரித்தவர். மண்டபம் ஒன்றிய அதிமுக., செயலாளரான இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலிலும் கலந்து கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பெரியவர் என அழைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால், ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமரைக்காயர் (72) இன்று (03/10/2019) மறைந்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image