கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட    அமானிமல் லாபுரம், எர்ரண அள்ளி, .தண்டுகாரண அள்ளி, கணபதி, ஜெர்தலாவ், பி.செட்டி அள்ளி, பேவு அள்ளி, கொரவாண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்கவும் , மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு பழைய டயர், தேங்காய் ஓடு, அம்மிக்கல், பிளாஸ்டிக் தொட்டி, உடைந்த பானை போன்றவற்றை அப்புறபடுத்தவும் திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது எனவும் ஊராட்சி முழுவதிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சென்று முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராமங்கள் தோறும் பண்ணை் குட்டை அமைத்தல், மண் வரப்பு, கல் வரப்பு அமைத்தல், மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு தனியார் வீடுகளுக்கும் அரசு கட்டிடங்களுக்கும் திருமண மண்டபம் தொழிற்சாலை ஆகியவற்றிற்க்கு கட்டாயம் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் மேற்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கெளரி, தனபால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலா, சாமிநாதன், சரத்குமார், சண்முகம், தாரா, சுகந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி செயலர்கள் சண்முகம், வேலு, பவுன்ராஜ், சஞ்சீவன், கோவிந்தன், தாமோதிரன், முனிவேல், முனிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..