பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை மதுரையில் தொடங்கப்பட்டது.

மதுரையில் பி.எஸ்.எல். 4ஜி சேவை தின கொண்டாட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை தமிழ்நாடு வட்டம் அதன் அதிவேக 4G சேவையை மதுரை மாநகரில் 137 டவர்களில் தொடங்கியது. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், 4ஜி சிம்மை வெளியிட்டு, முதல் 4ஜி வீடியோ அழைப்பை துவக்கி வைத்தார். பொது மேலாளர் ராஜீ முன்னிலை வகித்தார்.இது குறித்து பொது மேலாளர் ராஜு கூறியதாவது : மதுரை நகர் பகுதி பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள் யாரெல்லாம் 4Gயை பயன்படுத்தும் நவீன தொலை பேசி வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும், மதுரை தல்லாகுளம், எல்லீஸ்நகர், கீழ மாசி வீதி, கே கே நகர், கே.புதூர், பீ.பி.குளம், வடக்கு சித்திரை வீதி, மற்றும் வில்லாபுரம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் தற்போது உள்ள சிம் கார்டுகளுக்கு பதிலாக 4 G சிம் கார்டுகளை இலவசமாக மாற்றி கொள்ளலாம் என தெரிவித்தார்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..