அபாய கட்டத்தில் ரயில்வே மேம்பாலம்.தினசரி விபத்து பலர் படுகாயம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலை உள்ள திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலத்தில் பாலம் விரிசல் விட்டு பல இடங்களில் சுமார் அரை அடி அளவுக்கு பள்ளம் விழுந்து இணைப்பு கம்பி வெளியே தெரிந்தும் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரங்களில் கவனிக்காமல் அந்த பள்ளத்தில்  கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் அதை பார்க்காமல் விடுவதால் வாகன பழுது ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த ரயில்வே மேம்பாலத்தில் சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். தூங்கிக்கொண்டிருக்கும் மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..