Home செய்திகள் கிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம்

கிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட அளவில்  02-10-19 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் பாதை தோழர்கள் கலந்து கொண்டு நிறைவேற்றியமுக்கியதீர்மானங்களாக கண்மாய் தூர்வாறுதல், ஊரணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பனை விதை நடுதல், சாலை அமைத்து தருதல், ஊரணிக்கு படித்துறை அமைத்து தருதல் , பாலம் அமைத்தல், குடிதண்ணீர் தொட்டி அமைத்தல், பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்குதல் , மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல் , ரேசன் கடைகளில் பொருட்களை சரியாக விநியோகம் செய்யவும், பேருந்து வசதி செய்து தரவும், மின் கம்பங்களை சரி செய்யவும், கடற்கரையில் பூங்காவை திறக்கவும், சமுதாய கட்டிடத்தை சீரமைக்க கோரி தீர்மானமாக பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

இராமநாதபுரம் ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலர் ரமாபிரியா துரை அவர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.கிராம நிலக்கிழார் முருகேசன் தலைமை தாங்கினார் .இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் முனிராஜ் பற்றாளராக கலந்து கொண்டார்.சிறப்பு பற்றாளராக இராமநாதபுரம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன் கலந்து கொண்டார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், தன்னார்வலர்கள் மகேஸ்வரன்,ராமு,ஆனந்தகுமார், சுதாகரன். ஆகியோர்கலந்து கொண்டனர்.

சித்தார் கோட்டை ஊராட்சியில் சித்தார் கோட்டை ஊராட்சி செயலர் முனிய சாமி மற்றும் சித்தார் கோட்டை கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகரிகள் பலர் கலந்துகொண்டனர் .மக்கள் பாதை இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் கலந்து கொண்டார்.கடலாடி ஒன்றியம் இதம்பாடல் கிராமத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி,கிராம நிர்வாக அலுவலர் தமிழ் பாண்டியன்,சுகாதாரத்துறை சார்பாக கோடிமலர், முன்னாள் ஒன்றிய சேர்மன்,கிராம ஊராட்சி செயலர் முகமது இப்ராஹிம்,நியாயவிலைக் கடை ஊழியர் ஆறுமுகம் மற்றும் மக்கள் பாதை கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் நளினிகாந்த் மற்றும் கனக சபாபதி, பொது மக்கள், மக்கள் பாதை தன்னார்வலர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

நயினார்கோவில் ஒன்றியம் கிளியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் பாதை தன்னார்வலர்கள் கோவிந்தராஜ், மாதவன் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.திருவாடானை ஒன்றியம் குஞ்சங்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார அலுவலர் கனகராஜ் அவர்களும் ஊராட்சி செயலாளர் இந்திரா அவர்களின் தலைமையில் மக்கள்பாதை திருவாடானை ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள் கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர்.

மண்டபம் ஒன்றியம் பட்டிணம்காத்தான் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. ஊராட்சி செயலர் நாகேந்திரன் , மக்கள் பாதை மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் , தன்னார்வலர் செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.மண்டபம் ஒன்றியம் பாம்பன் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சின்னபாலம் முருகேசன், ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் மற்றும் மக்கள் பாதை மண்டபம் ஒன்றிய பொருப்பாளர் முகம்மது ராஜ்கபூர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் ஒன்றியம் செல்லூர் பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா,ஊராட்சி செயலாலர் ரகுபதி, வேளாண்மை உதவி இயக்குனர் கேசவன் ராம், மக்கள் பாதை மாவட்ட தாய்மண் திட்ட பொருப்பாளர் பசுமை தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என மக்கள் பாதை தோழர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் ஊரணங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை. மண்டல அலுவலர் வராத காரணத்தினால் கிராம சபை முறையாக நடைபெறவில்லை. ஊராட்சி செயலர் பால முருகன் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை சொல்ல இயலாமல் தினறினார். மேலும் கிராம சபை கூட்டத்திற்கான தகவலையும் முறையாக சொல்லவில்லை. ஊராட்சி செயலர் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு உடனடியாக சென்று விட்டார். கருப்பு எழுத்துக் கழக மாநில செயலாளர் மகாலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, ஊரணங்குடி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் ஜான்சன், மனோகரன், புறகரை இளைஞர் மன்ற தலைவர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு மீண்டும் கிராம சபை நடத்த வலியுறுத்தினர்.

கமுதி ஒன்றியம் பேரையூர் ஊராட்சியில் முறையாக அறிவிப்பு இல்லாத காரணத்தினால் கிராம சபை முறையாக நடைபெறவில்லை.பேரையூர் ஊராட்சி செயலர் ரமேஷ் குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை சொல்ல இயலாமல் தினறினார். ஊராட்சி செயலர் நூறு நாள் வேலை என்று அழைத்து வந்த நபர்களை வைத்து கிராம சபை நடத்துவது போல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு உடனடியாக சென்று விட்டார்.மேலும் பேரையூர் ஊராட்சிக்கு உட்ப்பட்ட சேர்ந்தகோட்டை பொதுமக்கள் 150 பேர் மற்றும் கமுதி ஒன்றிய துணை பொருப்பாளர் மனோஜ் பிரபாகரன் , பேரையூர் கிராம பொறுப்பாளர்கள் பாபு, யோக குமார், சூரிய பிராகாஷ் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் பலர் ஒன்று திரண்டு கிராம சபையை புறகணித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், முறையான அறிவிப்போடு மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.

நயினார்கோவில் ஒன்றியம் குளத்தூர் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள வில்லை, ஒரு சில மக்களை வைத்து கையெழுத்து வாங்கி கொண்டு அனுப்பி விட்டனர். ஊராட்சி செயலாளர் மட்டும் கலந்து கொண்டார். மற்ற அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை.நயினார்கோவில் மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டு முறையாக நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

போகலூர் ஒன்றியம் செய்யாலூர் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள வில்லை, ஒரு சில மக்களை வைத்து கையெழுத்து வாங்கி கொண்டு அனுப்பி விட்டனர். போகலூர் மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் கலந்து கொண்டு முறையாக நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!