
மாணவப்பருவத்தில் சிறந்த காலம் என்பது பள்ளிக்கூட காலமாகத்தான் இருக்கும். எத்தனையோ சிறந்த கல்லூரிகளில் படித்து, வளர்ந்து, வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும் பள்ளிகாலத்தையே பொற்காலமாக சிலாகித்து விவரிப்பார்கள். அதற்கு கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியும் விதிவிலக்கல்ல. கீழக்கரையின் பாரம்பரிய மிக்க பள்ளிகளில் ஒன்றான ஹமீதியா தொடக்கப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சங்க துவக்க விழா (ALUMNI ASSOCIATION) வரும் அக்டோபர் 6ம் தேதி (ஞாயிறு) அன்று பள்ளி வளாகத்தில் மாலை 04.00 மணியளவில் நடைபெற உள்ளது.
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி அப்பகுதியில் 1998ம் ஆண்டு மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் இப்பள்ளியில் படித்து வெளியேறியவர்கள் பல துறைகளில் வல்லுனர்களாகவும், அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும், பல்லாயிர மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடியவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் வசிக்கும் முன்னாள் மாணவர்களால் 1986ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. பின்னர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஆர்வமுள்ள பல முன்னாள் மாணவர்களால் பாரம்பரியம் மிக்க அப்பள்ளியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பபோடு சமூக வலைதளங்கள் மூலம் 300க்கும் மேற்பட்டவர்களை இணைத்து “(ALUMNI ASSOCIATION” தொடங்கப்பட உள்ளது.
வரும் அக்டோபர் 6ம் தேதி (ஞாயிறு) அன்று பள்ளி வளாகத்தில் மாலை 04.00 மணியளவில் நடைபெற உள்ள, இந்த தொடக்க நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கூட்டமும் நேற்று (02/10/2019) சென்னையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.