Home செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பு

by mohan

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்டம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தாங்கள் பங்கேற்ற கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், கழிவறை, சாய்வுதளம், நூறு நாள் வேலை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கூட்டத்தில் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றினர்.

வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி கிராமத்தில் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையிலும், சித்துவார்பட்டி கிராமத்தில் ஒன்றிய தலைவர் சிவா தலைமையிலும், புத்தூர் கிராமத்தில் கிளை செயலாளர் ராஜாராம் தலைமையிலும், ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு கிராமத்தில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி தலைமையிலும், சித்தரேவு கிராமத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையிலும், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் கே.கீரனூர் கிராமத்தில் கிளைத்தலைவர் தண்டபாணி தலைமையிலும், பொருளூர் கிராமத்தில் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி தலைமையிலும், நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பஞ்சு தலைமையிலும், ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கட்டசின்னான்பட்டி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையிலும் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

பங்கேற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!