காந்தி ஜெயந்தி விழாவில் மது போதைப் பழக்க வழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

AIYF தேனி மாவட்டக்குழு 150வது காந்தி ஜெயந்தி விழாவில் மது போதைப் பழக்க வழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி, மதுபோதை கலாச்சாரத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் ஐந்து மையங்களில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சின்னமனூர் நகர்க்குழு சார்பில் நகர் தலைவர் பி.ஆரோக்கியராஜா தலைமையிலும், ஆண்டிபட்டி ஒன்றியக்குழு சார்பில் ஒன்றிய அமைப்பாளர் அந்தோணி தலைமையிலும், உத்தமபாளையம் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் வீ.பாண்டி தலைமையிலும், கம்பம் நகர்க்குழு சார்பில் நகர் செயலாளர் MVK.மணிகண்டன் தலைமையிலும், போடி நகர்க்குழு சார்பில் நகர் செயலாளர் S.சபரிநாதன் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூர் ஒன்றியச் செயலாளர் தோழர் மு.காசிராஜா, கம்பம் நகர் செயலாளர் MV.கல்யாணசுந்தரம் AITUC ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜா, AIYF மாவட்ட துணைச் செயலாளர் M.சாமிகண்ணன், சின்னமனூர் நகர் செயலாளர் இர.மகேந்திரன் நகர துணைத்தலைவர் A.முருகன் மற்றும் பெண்கள் உட்பட AIYF-ன் அனைத்து நகர் ஒன்றியக்குழு தோழர்கள் திரளாக கலந்து கொண்டு காந்தியின் 150வது பிறந்த தினத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் மது போதை பழக்க வழக்கங்களுக்கு எதிராக உரக்க முழக்கங்களிட்டு உறுதிமொழி ஏற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..