காந்தி ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆர்.ராஜா உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் செயல் அலுவலர் சு.மெய்மொழி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் சு.முனியசாமி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். கமுதி, அபிராமம் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி முதுகுளத்தூர், சாயல்குடி பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் பேரூராட்சி செயல் அலுவலர் செ. மாலதி ஆகியோர் தலைமையில் தலா 2 ஆயிரம் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சு.மெய்மொழி அறிவுறுத்தல் படி தலா 2 ஆயிரம் வீதம் 4 ஆயிரம் மரக்கன்றுகள் என மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image