இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தொடரும் பொதுநல சேவை..

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பம்பாய்கார் வீடு மர்ஹூம் அப்துல்காதர் அவர்களின் மகனார் முகம்மது இலியாஸ் அவர்கள் சவூதி அரேபியா தம்மாமில் பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில் முகம்மது இலியாஸ் (வயது- 40) கடந்த 22.09.2019 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் பணி புரிந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் சாதிக்கை   இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் மாநில பொதுசெயலாளர் ஹபீபு ரஹ்மான் தொடர்பு கொண்டு மௌத்து குறித்து கேட்டறிந்து  நல்லடக்க விசயத்தில் உதவி ஏதும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் செய்கிறோம் என தெரிவித்தார். அவரும் இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியை ஏற்றுக்கொண்டார்; இறந்தவரின் மனைவியிடமிருந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை நிர்வாகி சமீமுல்லாஹ் பெயரில் ஃபவர் ஆஃப் அட்டர்னியை பெற்றுக்கொண்டு இறந்தவரின் நல்லடக்க ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டது.

சாதிக் மற்றும் இந்திய தூதரகம், சவூதி அரசின் ஒத்துழைப்போடு இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகள் ஹபீபு ரஹ்மான் மற்றும் சமீமுல்லாஹ், அல்ஹஸ்ஸா ஜின்னா ஆகியோர் முன்னின்று இறந்தவரின் நல்லடக்க நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

நேற்று (01.10.2019) மாலை 5 மணியளவில் தம்மாம் மஸ்ஜித் ஃபுர்கானில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதன் அருகில் உள்ள (91) ஏரியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரணமடைந்த அன்னாரின் பிழைகளை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை நலமாக்கிடுவானாக.

தகவல் : கீழை ஜஹாங்கீர் அரூஸி.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image