ஆரணி அருகே கட்டிய மின் கட்டணத்தை 1கோடி ரூபாய் மின்வாரிய ஊழியர் மோசடி செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்;டம் ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது.. இந்த பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெற்று வருகின்றது..களம்பூர் துணை மின்வாரிய அலுவலகம் மூலம் அரிசி ஆலைகளுக்கு மாதம் தோறும் பல கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் களம்பூர் துணை மின் நிலைய காசளாராக மணிகண்டன் என்பவர் பணிபுரிந்துள்ளார். இவர் சுமார் 1கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் மின்கட்டண பணத்தை கையாடல் செய்துள்ளார். இது சம்மந்தமாக காசாளர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து கைது செய்தனர்.இந்நிலையில் களம்பூர் பகுதியில் கடந்த 2012 முதல் 2014 வரையிலான மின்கட்டணம் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் வீட்டில் பயன்படுத்திய மின் கட்டணம் உள்ளிட்ட 241 வாடிக்கையாளர்களுக்கு 84லட்சம் ரூபாய் செலுத்திய மின்கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும் என்று ஆரணி மின்வாரிய துறையினர் மூலம் நோட்டிஸ் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் பொதுமக்கள் ஓன்றிணைந்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரிய அலுவலக காசளார் கையாடல் செய்த பணத்தை நாங்கள் ஏன் செலுத்த வேண்டும் என்றும் மின்கட்டணம் செலுத்திய ரசீது தங்களிடம் இருப்பதாக பொதுமக்கள் அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறினார்கள்.பின்னர் அரிசி ஆலை உரிமையாளர்கள் பொதுமக்கள் மின்வாரிய இணை இயக்குநர் திருமலை சீனிவாசன் என்பவரிடம் மனு அளித்தனர்.

மின்வாரிய ஊழியர் பொதுமக்கள் செலுத்திய மின்கட்டணத்தை கையாடல் செய்து விட்டு பொதுமக்கள் செலுத்திய கட்டணத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்று பொதுமக்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..