Home செய்திகள் ஆரணி – ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

ஆரணி – ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

by mohan
    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தில் உள்ள தம்பட்ட கோடி மலைப்பகுதியில், ஜல் சக்தி அபியான் – நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் வருவாய்த் துறை மூலமாக அரசு தரிசு நிலத்தில் மியாவாக்கி முறையில்  2 அடிக்கு 2 அடி இடைவெளியில் முதல் கட்டமாக 5000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ். கந்தசாமி துவக்கி வைத்தார்.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 375 ஏக்கர் நிலப்பரப்பில் 30 இலட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் இயற்கை சிறு காடுகள் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    இந்நிலையில் ஆரணி வட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், காட்டுகாநல்லூர் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தில், தம்ட்ட கோடி மலைப் பகுதியில், அரசு தரிசு நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் மூலம் முதல் கட்டமாக 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் 5000 குழிகள் தோண்டப்பட்டு அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட 750-க்கும் மேற்பட்டோர் ‘வேப்பம், புங்கன், பூவரசன், தேக்கு, பாதாம், வேங்கை உட்பட பல்வேறு  வகையான 5000 மரக்கன்றுகளை ஜல் சக்தி அபியான் –  நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பாக ஒரே நேரத்தில் நடப்பட்டுள்ளது.
 செய்தியாளர் மூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!