கடல் அட்டை மீதான தடையை நீக்கக் கோரி வனத்துறை அமைச்சரிடம் மண்டபம் மீனவர்கள் முறையீடு

பாக் ஜலசந்தி , மன்னார் வளைகுடா பகுதியான மண்டபம் கடல் பகுதியில் மீன்பிடி வலைகளில் கடல் அட்டை அதிகளவில் பிடிபடுகிறது. கடல் அட்டையை அரிய வகை கடல் வாழ் உயிரினமாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கடற்பசு, கடற்குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை உள்பட 54 அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை சட்ட விரோதமாக வேட்டையாடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க இந்திய தண்டனை சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை, பாம்பன் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் டன் கணக்கில் பதப்படுத்திய மற்றும் உயிருடன் கடல் அட்டையை இலங்கைக்கு கடத்த முயன்ற பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்த கட.ல் அட்டை நீதிமன்ற உத்தரவுப்படி கடலில் உயிருடன் விடப்பட்டன. கடல் அட்டை தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் இழப்பால் குடும்ப உறுப்பினர்கள் கஷ்ட ஜீவனம்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கடல் அட்டை மீதான தடையை நீக்கக் கோரி தமிழக வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசனிடம் , மண்டபம் மீனவர்கள் நேற்று (அக்.1) சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர். இக்கோரிக்கையை மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் பரிந்துரைப்பதாக மண்டபம் மீனவர்களிடம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்தார். கோரிக்கை மனுவை ஏற்று நடவடிக்கைக்கு பரிந்துரைத்த அமைச்சர் சீனிவாசனுக்குமண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் பாரம்பரிப மீனவர் நலச்சங்க செயலாளர் காதர் முகைதீன், ஆலோசகர் மாடசாமி,அபுபக்கர், ரகுமத்துல்லா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..