Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பகுதி தற்காலிக சாலையை சீர் செய்ய முதலமைச்சர் தனிப்பிரிவு உத்தரவு.. மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் மனு மீது நடவடிக்கை…

இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பகுதி தற்காலிக சாலையை சீர் செய்ய முதலமைச்சர் தனிப்பிரிவு உத்தரவு.. மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் மனு மீது நடவடிக்கை…

by ஆசிரியர்

இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பகுதி தற்காலிக சாலையை சீர் செய்ய முதலமைச்சர் தனிப்பிரிவு உத்தரவு.. மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் மனு மீது நடவடிக்கை…

கீழக்கரை – இராமநாதபுரதம் பிரதான சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரயில் கடந்து செல்லும் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துரிதமாக தொடங்கியது. இதனால் அப்பகுதியில் சாலைகள் தோ்ண்டப்பட்ட காரணத்தால் தற்காலிமாக வாகனம் செல்லும் வழி உருவாக்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி பணிகளும் தொடரவில்லை, தற்காலிக சாலையும் மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இப்பிரச்சினை மற்றும் கீழக்கரை வீட்டு வரி பிரச்சினையை முன்னிருத்தி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக துரித நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிபிரிவுக்கு மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவின் அடிப்படையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!