கீழடி அகழாய்வை பார்வையிட வருபவர்களை விரட்டியடிக்கும் அரசு அதிகாரிகள்.. ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா??.. தமிழனுக்கு தமிழை அறிய கட்டுப்பாடா??

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 5 ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருப்பதால் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் இந்த அகழாய்வு நடைபெறும் இடங்களை பார்வையிட வருகின்றனர். பொதுமக்களை முழுமையாக பார்வையிட அனுமதிக்காமல் விரட்டியடிப்பதாகவும். இது குறித்து பொதுமக்கள் தொல்லியல் துறையினரிடம் முறையிட்டால் தொல்லியல் துறையினர் பொதுமக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அங்கு வேலை செய்யும் உள்ளூர் மக்களை வைத்து மிரட்டி விரட்டியடிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ கூறுகையில், “தொல்லியல் துறையினர் 6 மணிக்கு வேலை முடிப்பதாக இருந்தால் 5 மணிக்கே அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனால் 6 மணி வரை அனுமதித்து விட்டு உள்ளே சென்ற பிறகு தொல்லியல் துறையினர் பார்வையிட அனுமதி மறுக்கின்றனர்.

இது குறித்து ஏன் உள்ளே அனுமதித்து விட்டு பிறகு அகழாய்வு இடங்களை பார்வையிட அனுமதிக்காமல் விரட்டுகிறீர்கள் இதை நீங்கள் நுழைவு வாயிலிலே அறிவிப்பு செய்திருந்தால் நாங்கள் உள்ளே வராமல் சென்றிருப்போம் என முறையிட்டால் அப்படி தான் செய்வோம் என கூறி பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு வேலை செய்யும் ஆட்களை வைத்து மிரட்டி அடிக்க வைக்கின்றனர். தமிழரின் பெருமையை அறிந்து கொள்ள வருபவர்களை விரட்டியடிப்பதாகவும் தமிழக தொல்லியல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..