உசிலம்பட்டியில் டிஎன்டி மாணவர் மாநாடு. பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள வீரணத்தேவர் ஜோதியம்மாள் திருமண மண்டபத்தில் டிஎன்டி மாணவர் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாநில மாணவரணி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓபிசி உள் ஒதுக்கீடு செய்திடவும், டிஎன்டி 9 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிடவும் உள்ளிட்ட 65 தீர்மானங்களை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.

இதில் சீர்மரபினர் நலசங்க தலைவர் ஜெபமணி, செயலாளர் பொன் ஆதிசேடன், பொருளாளர் தவமணி, மாநில மாணவரணி தலைவர் கவியரசன்,விக்னேஷ், மகளிரணி தமிழ்செல்வி, மற்றும் சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள், தமிழ்வளர்ச்சி கழகம், சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் சோலைராஜா மற்றும் தழிழ்நாடு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேசிய அய்யாக்கண்ணு தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார். இதில் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image