இளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், இளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.கோணத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி.பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கோணத்தகோட்டையில் இருந்து இளையாங்கண்ணி கார்மேல் மாதா பள்ளிக்கு 11ஆம் வகுப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பிற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மாணவன் மீது ஏற்றி விட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

மோட்டார்சைக்கிள் மோதியதால் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாணவன் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்தம் வெளியேறி மாணவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் பலத்த காயமடைந்த மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தும் அதை குறிப்பிட்ட பள்ளி கடைபிடிக்காத காரணத்தால் மாணவரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..