மண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடலில் விடப்பட்டன

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு . கடற்கரையில் மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், மெரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்ஐ., கணேசன் ஆகியோரை உள்ளடக்கிய வனத்துறை, வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் மெரைன் போலீசார் பாக் ஜல சந்தியில் இன்று அதிகாலை கூட்டு ரோந்து பணி சென்றனர். அப்போது வடக்கு கடல் பகுதியில் கரை திரும்பிய இரண்டு விசைப்படகுகளை ரோந்து குழுவினர் சோதனையிட்டனர். அப்படகுகளில் இருந்த 200 கிலோ கடல் உயிர் அட்டைகளை கைப்பற்றினர். படகுகளில் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர் 9 பேரை கைது செய்து, இரண்டு படகுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடல் அட்டைகள் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி ராதா கிருஷ்ணன் உத்தரவுப்படி கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள்,பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடலுக்குள் கொட்டினர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image