உலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்

மதுரை மாவட்டம் திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் திருக்கோவில்.. இத்திருக்கோவிலில் நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற உலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ பஞ்ச ருத்ர ஹோமம், ஸ்ரீ உமா மஹேஸ்வர ஹோமம், ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி ஹோமம் மற்றும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது…முன்னாள் பேரூராட்சி தலைவர் பலராமன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.. அதிகாலை 5 மணியளவில் ருத்ர யாகம் பூஜை தொடங்கி மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது… அதன் பிறகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் அன்னபூரணி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு , சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ நாமத்தை கூறினார்.. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மன்நாயகி இயக்கம்  ஹரிராம்  கவனித்து வந்தார்.. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் திருக்கோவில் தலைவர்  வித்யாபூர்ணாச்சரி  முன்னிலையில் நடைபெற்றது… இதில் திருக்கோவில் உபதலைவர்  கிருஷ்ணன், செயலாளர்தேசிகாச்சாரி, பொருளாளர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.. நிகழ்ச்சியின் இறுதியில் பக்தகோடிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image