மண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..

இலங்கையில் இருந்து தங்கம், சோப்பு, கிராம்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் மர்மப்படகுகளில் தமிழகத்திற்கு இரவு வேளைகளில் கடத்தி வரப்படுகிறது. இது போல் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படுகிறது. தகவல் மற்றும் ரகசிய கண்காணிப்பு படி கடத்தல் தங்கம் பிடிபடுகிறது. போதை பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 40 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 25 க்கும் மேற்பட்டோர் மத்திய வருவாய் புலனாய்வு, கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக இலங்கை தங்கம் தடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது . இதன்படி தூத்துக்குடி மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர். இலங்கையில் இருந்து மர்மப்படகு மூலம் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடல் பகுதிக்கு கடத்தி வந்து காரில் எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கத்தை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மதுரை – ராமேஸ்வரம் சாலையில் நேற்றிரவு பறிமுதல் செய்தனர். காரில் சென்ற மதுரை கே.கே.நகர், சென்னை புதுப்பேட்டை சேர்ந்த இருவர் உள்பட 5 பேரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தங்கம் விலை பவுன் ரூ.31 ஆயிரத்தை எட்டிய நிலையில் தங்கம் கடத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..