உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுாாில் செயல்படாத குப்பை உரக்கிடங்கில் குவியும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கிராமமக்கள் குற்றச்சாட்டு

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை உரக்கிடங்கு செயல்படாததால் மலை போல் குவியும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டுவதற்காக உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.மேலும் ரூ 1.30 கோடி மதீப்பீட்டில் திடக்கழிவுமேலாண்மை திட்டத்தின் கீழ் புதிய உரக்கிடங்கு அமைக்கப்பட்டு நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து உரமாக மாற்றுவர்.இந்த குப்பை உரக்கிடங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்தப்பநாயக்கனூரில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அமைக்கப்பட்டது முதல் இதுவரை குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் உட்பட எந்த உபகரணங்களும்; அமைக்கப்படவில்லை. இதனால் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொண்டு சென்று தரம் பிரிக்காமல்; போடுகின்றனர். மறுசுழற்ச்சி முறை இல்லாததால் குப்பை சிறுகச் சிறுகச் சேர்ந்து தற்போது குப்பைமேடாக காட்சியளிக்கிறது. குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில் துர்நாற்றம் வீச தொடங்கியதுடன், சுகாதாரகேடு ஏற்பட்டு, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்;. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகனை அகற்றி தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து இப்பகுதியைச் சோ்ந்த திணேஷ் கண்ணன் பாண்டி ஆகியோா் வட்டாச்சியாிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..