Home செய்திகள் அரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு

அரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு

by mohan

 ஆதிதிராவிடர் மாணவியர்களுக்கான விடுதி செய்யாறு டவுன் கன்னியம் நகர் பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடைபெறும் விடுதி ஆற்காடு சாலையில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் மாணவிகள் விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில்லை பாதுகாப்புகளும் சரியாக இல்லை என குற்றச்சாட்டுகள் வந்தன. இதனை தொடர்ந்து கன்னியம் நகரில் இயங்கும் ஆதிதிராவிடர்களுக்கான மாணவியர் விடுதியில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு நடத்தினார். அந்த விடுதியில் 134 மாணவிகள் தங்கிப்படிக்கின்றனர். ஆய்வின் போது அங்கிருந்த விடுதி காப்பாளர் மரியம்மாளிடம் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. மாணவிகளின் வருகை பதிவேடு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், இருப்பு பதிவேடு குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து வருகை பதிவேடு அவரிடம் காண்பிக்கப்பட்டது. அதில் முறையாக பராமரிக்காமலும், செப்டம்பர் மாத விவரம் எதுவும் பதிவிடாமலும் இருந்தது.விடுதியில் 134 மாணவிகள் தங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 பேர் சாப்பிடும் அளவுக்குத்தான் சமைக்கப்பட்டிருந்தது. தினமும் பொரியலுடன் சாம்பர் மற்றும் ரசம் என பட்டியல் தயார் செய்து சமைக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் பொரியல் இல்லை. இது குறித்து அவர் சமையலர்களிடம் கேட்டபோது காய்கறி வாங்கி கொடுப்பதில்லை என காப்பாளர் மரியம்மாள் மீது குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து ஆற்காடு சாலையில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதியினையும், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அங்கு தங்கிருந்த மாணவிகளிடம் விசாரித்த போது விடுதி காப்பாளர் அங்கேயே தங்குவதில்லை எனவும், சேத்துப்பட்டில் இருந்து வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வருவதாகவும், எங்களிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிடுகிறார் எனவும் கூறினர். தொடர்ந்து சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த நவீன சாதனங்களை பயன்படுத்தாமல் கிடப்பது தெரியவந்தது. பின்னர் அங்கு மாணவிகள் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டபோது சாம்பார் ருசியாக உள்ளது என தெரிவித்தார். மகிழ்ச்சியடைந்த மாணவிகள் சிரித்தபடியே நாங்கள் சமைத்தது நன்றாக இருக்கிறதா? என கேட்ட போது தான் மாணவிகளே சமைத்து சாப்பிடுவது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது சில மாதங்களாகவே சமையலர், சமையல் உதவியாளர் என யாரும் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிடுவதாக கூறினர்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய விடுதி காப்பாளர் விடுதி தங்குவதில்லை என்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை, 134 மாணவிகள் தங்குவதாக காப்பாளர் மரியம்மாள் தெரிவித்துள்ள நிலையில், அது சந்தேகமாக உள்ளது, இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்திட பரிந்துரை செய்யப்படும். மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!