போளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.

போளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது. மேலும் அந்தப்பகுதியில் மேம்பாலப்பணி ஆரம்பிக்கும்போது மறுபடியும் மூடவும் வாய்ப்பிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஜனவரி மாதம் முதல் போளூர் ரயில்வே கேட் மேம்பாலப் பணி நடந்துவருகிறது. மாற்றுப்பாதை நிலத்தின் வழியேயும், ஏரிக்கால்வாய் வழியாகவும் அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பை பாஸ் வழியாக ஐந்து கிலோமீட்டர் செல்வதில்எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால் இருசக்கர வாகனங்கள் பாடு திண்டாட்டம் ஆனது. இதனால் இருசக்கரவாகனங்களில் செல்வோர் ரயில்வே கேட் மூடப்பட்டிருப்பதால் வண்டியை சாய்த்தும்மடக்கியும் என அடுத்த பக்கம் சென்று கொண்டிருந்தனர். ஆறு மாதத்திற்கு பிறகு மதியம் திடீரென கேட் திறக்கப்பட்டது. சில மணி நேரங்களில் மறுபடியும் மூடப்பட்டது.

ஞாயிறு முதல் கேட் எப்போதும் போல் திறந்திருக்கும். ரயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படும். ஆனால் இந்த வழியே ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்தப்படும்..தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் இருபக்கமும் தூண்கள் அமைக்கும் பணி மட்டும் முடிந்துள்ளது.ரயில்வே துறை மூலம் கேட்டின் இரண்டு புறமும் அமைக்கப்பட வேண்டிய தூண்கள் இன்னும் வேலை ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில் கேட்டினை திறப்பதற்கு ரயில்வே துறையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், இன்று பரிசோதனைக்காக திறந்ததாகவும், வரும் ஞாயிறு முதல் கேட் திறந்தே இருக்கும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிதார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்து மேலேபாலம் அமைக்கும் போதுதான் மறுபடியும் கேட் அடைக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வசதியாக ரயில்வே கேட் மறுபடியும் திறக்கப்பட்டது போளூர் மற்றும் ஹவுசிங் போர்டில் வசிக்கும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..